தப்புத் தாளம்




பூமியாய் நீ சுடுவதால்
வானமாய் நான் அழுகிறேன்
என் கண்ணீரில் நீ குளிர்வாய் என்றால்
என்றும் அழுவேன் அடை மழையாய்


♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ன் காதலும்
உன் நிழல் போலத்தான்
என்றும் உன்னைத் தொடரும்
உனக்குத் தெரியாமல்



♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ழுது அழுது பாலைவனமாகி விட்டது என் நெஞ்சம்
கானல் நீராய் அதில் உன் நினைவுகள் மட்டும்


♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


ன் கண்ணீரும் உன்னைத் தான் காதலிக்கிறதோ..?
நீ என்னைப் பிரிந்தால் அது கண்ணை விட்டு
உன்னைத் தொடர்கிறது...!
அதற்கும் காதல் தோல்வி தான்... என்னைப் போல்
உன்னைச் சேராமல் மண்ணில் மறைகிறது.



♥ ♥ ♥      ♥ ♥ ♥      ♥ ♥ ♥     ♥ ♥ ♥    ♥ ♥ ♥    ♥ ♥ ♥


சொந்தக் கதை இது சோகக் கதை



எவன்டீ உண்ண பெத்தா..... பெத்தா...
கைல கெடச்சா செத்தான்.... செத்தான்....


சிம்பு வின் rap voice அலறியது. Phone ஐ பார்த்தேன். மணி 7. ச்சே..... அதுக்குள்ள விடுஞ்சிருச்சா.... மெல்லமாய் திரும்பிப் படுத்தேன்.

ஏண்டி ஒருவாட்டி சொன்னா உனக்குப் புரியாதா...?

என்ன கனவா.... நமக்கு இப்படி எல்லாம் கணவு வராதே.....

எத்தன தடவ டி சொல்றது.....?

இந்த முறை தூக்கம் தெளிந்துவிட்டது . எட்டிப்பார்த்தேன்.

அவனே தான்...!

Life ல எவ்ளோ பெரிய risk வேனாளும் எடுக்கலாம் . ஆனா love பண்றவன் room mate ஆ மட்டும் இருக்கக் கூடாது.

விடிய விடிய phone ல் சண்டை போட்டு விஜய் காந்த் ரேஞ்சுக்கு அவன் மூஞ்சி வீங்கி இருந்தது.
என்ன மச்சி... Family problem ஆ.... இதுக்குத் தான் என்ன மாதிரி free bird ஆ இருக்கணும் என்றேன்.

"@!###$$ $$$#@%$%$ @&**^&%% @!!@#$#$"

அத்தநயும் அக்மார்க் முத்திரை குத்தப் பட்ட நாராசமான வார்த்தைகள்....
( இவன் என்னத் திட்டுரானா.. இல்ல இதான் சாக்குன்னு அவள திட்டுரானா....)

அன்பார்ந்த விருச்சக ராசி நேயர்களே...!

அட நம்ம ராசி ... ஓடிப்போய் டீவி முன்னால் உட்கார்ந்தேன்

நான் 5 வது படிக்கும்போது வந்த அதே அக்கா தான் சன் டீவியில் இன்னும் ஜோசியம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
" உங்களுக்கு ஏற்ற திசை கிழக்கு. நிறம் ஊதா. ஏற்ற என் 6..."

அதுக்குன்னு நான் கிழக்குச் சீமையிலே படம் பார்த்துட்டா office க்கு போக முடியும். எத்தன வருஷம் ஆனாலும் இவங்க dialogue அ மாத்துர மாதிரி தெரியல....
கோவமாய் கிளம்பினேன்.

அவசர அவசரமாய் குளித்து முடித்த பின் தான் ஞாபகம் வந்தது. இன்று வெள்ளிக்கிழமை.
இதற்காகத்தான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

வெள்ளிக்கிழமையில் கிடைக்கும் சந்தோசம் எனக்கு வேலை கிடைத்தபோது போது கூட வந்ததில்லை. வெள்ளிக்கிழமையின் ஆனந்தத்தை ஒரு Software Engineer ஆல் மட்டும் தான் உணர முடியும்.

ஒரு வழியாக கிளம்பி Train ஐ பிடித்தேன்.

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஏக்கம் . Side dish எல்லாம் கொடுத்த ஆண்டவன் எனக்கு Main Dish மட்டும் கொடுக்க மறந்துட்டான். ஆமாங்க... எனக்குன்னு ஒரு Girl friend இல்லை. சரி.. college யாச்சும் ஏதாவதுண்னு கேட்டீங்கன்ணா... 10 ஆவது... 12 ஆவது.... ஏன் LKG UKG வரைக்கும் Reewind
பண்ணினாலும் என் வாழ்க்கை வரண்ட சகார பாலைவனம் தான்...

நான் முழுசா ஏங்கி முடிக்கறத்துக்குள்ள நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. Bus ஐ பிடித்து office க்கு சென்றேன். என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் ( அதாங்க ... Singles ) எங்க வேணாலும்
போலாம் ஆனா வெள்ளிக்கிழமை அன்னிக்கு IT Company க்கு மட்டும் போகக் கூடாது.

நம்ம ஊர்ல வெள்ளிக்கிழமைனா பொண்ணுங்க எப்படி இருப்பாங்க...?

சீவக்காயா அரைச்சு தேச்சு குளிச்சு மல்லிகை பூவை வச்சுக்கிட்டு பச்ச அல்லது மஞ்சள் நிற தாவணியில துளசித் தழயோட மாரியாத்தா பாட்டயோ அல்லது காளியாத்தா பாட்டயோ பாடிக்கிட்டு இருப்பாங்க.....

இதே situation , IT company ல எப்படி இருக்கும்னா....

கிழிஞ்சு போன jean ஐ designer jean ன்னு சொல்லி இல்லாத விலைக்கு வாங்கி , அதுக்கு ஜோடியா அரக்கை சட்டை ( அதாங்க... Sleaveless ) யோடு சுத்திக்கிட்டு இருப்பாங்க. இவங்க துணிய தச்சுட்டு போடுறாங்களா... இல்ல போட்டுட்டு தக்கிறாங்களாங்க்கிறது இது வரை கண்டரியப்படாத உண்மை.

நொந்து போய் என் Cubicle குள் சென்றேன்.

திடீரென்று ஒரு குரல்.

" Hi ... I am Niveditta...."

ரொம்ப நாளாய் சும்மா இருந்த பக்கத்து சீட்டுக்கு
புதுசாய் வந்திருக்கும் வட நாட்டு lady.... சரி... கடவுள் எனக்கும் கதவை திறந்து வைத்து விட்டார்.....

என்ன பேசுவது..?

எதாவது ஹிந்தில பேசுவோமா.... நமக்கு ஹிந்தில தெரிஞ்சது....

" அக்லி காடி ப்ளாட்ஃபார்ம் நம்பர் சாத் பர் ராஹானா ஹோத்தி ஹை"

அவசரமாய் யோசித்தக் கொண்டே திரும்பினேன்....

நான் யோசித்த டைமில் ஓவர் டேக் எடுத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்த முள்ளுத் தாடி நிவேதித்தாவை தள்ளிக்கொண்டு போய் விட்டான்....

ஆண்டவனே நினைத்தாலும் நம்பல எல்லாம் கரையேத்த முடியாது...

நொந்து கொண்டே computer ஓடு குடும்பம் நடத்தத் தொடங்கினேன்....